பின்லாந்து தூதரகத்தின் இராஜதந்திரிகளை வெளியேற்றுவதாக ரஷ்யா அறிவிப்பு!

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள பின்லாந்தின் தூதரகத்தை மூடுவதாகவும், அதன் ஒன்பது இராஜதந்திரிகளை வெளியேற்றுவதாகவும் ரஷ்யா இன்று (ஜுலை 06) அறிவித்தது.
ரஷ்யாவுடன் நீண்ட எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் நேட்டோவின் புதிய உறுப்பினரான பின்லாந்து, இந்த மாத தொடக்கத்தில் ஹெல்சின்கியில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் பணிபுரியும் ஒன்பது தூதர்களை வெளியேற்றியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே ரஷ்யா மேற்படி நடவடிக்கை எடுத்துள்ளது.
பின்லாந்து அதிகாரிகளின் மோதல் நடவடிக்கைகளுக்கு பதிலளிப்பதன் ஒரு பகுதியாக, செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் பின்லாந்தின் துணைத் தூதரகத்தின் நடவடிக்கைகளுக்கான ஒப்புதலை அக்டோபர் 1 முதல் திரும்பப் பெற ரஷ்ய தரப்பு முடிவு செய்துள்ளதாக ரஷ்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
உக்ரைனில் ரஷ்யாவின் பெரிய அளவிலான இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து அண்டை நாடுகளுக்கு இடையிலான உறவு மோசமடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



