அதிபர் எச்சரித்ததால் தற்கொலை செய்துக்கொண்ட மாணவி!
#Student
#Lanka4
Thamilini
2 years ago
15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
குறித்த மாணவி பாடசாலைக்கு தொலைபேசியை கொண்டுச்சென்ற நிலையில், அடுத்தநாள் தந்தையுடன் வருமாறு அதிபர் எச்சரித்துள்ளார். இந்நிலையிலேயே குறித்த மாணவி தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கலென்பிந்துனுவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹுருலுனிகாவ ஜயசிறிகம பிரதேசத்தில் வசிக்கும் மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த மாணவி அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில், அனுதிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.