சீமெந்தின் விலையை குறைக்க நடவடிக்கை!
சீமெந்து விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதன்படி சீமெந்து மூடை ஒன்றின் விலை 300 ரூபாவால் குறைக்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், சீமெந்துஉள்ளிட்ட கட்டுமானத் துறையில் பயன்படுத்தப்படும் சில பொருட்களின் விலைகள் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் மற்றும் சப்ளையர்கள் தெரிவிக்கின்றனர்.
சீமெந்து விலை சுமார் 400 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும், கட்டுமானத் துறையில் வேலை பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கட்டுமானப் பொருட்களின் விலையை மேலும் குறைக்குமாறு கட்டுமானத் தொழிலாளர் சங்கங்களின் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.