ஐஸ்லாந்தில் 24 மணிநேரத்தில் 4.1ரிக்டர் அளவிலான ஆயிரக்கணக்கான நில அதிர்வுகள்

ஐஸ்லாந்து தலைநகர் ரெய்க்யவிக்கில் 24 மணி நேரத்திற்குள் 2200 நிலவதிர்வுகள் ஏற்பட்டிருப்பதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதுகுறித்து ஐஸ்லாந்தின் வானிலை ஆய்வு ஆய்வு மையம் தரப்பில், “ரெய்க்யவிக் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 2,200 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இந்த நிலநடுக்கங்கள் நாட்டின் தென் பகுதியில் பரவலாக உணரப்பட்டுள்ளன.
இந்த நிலநடுக்கங்கள் எரிமலை சீற்றம் விரைவில் ஏற்படக்கூடும் என்பதற்கான சமிக்ஞைகளாக கருதப்படுகின்றன. இதில் பல நில நடுக்கங்கள் மிதமான ( ரிக்டர் அளவில் 4.1 ) அளவில் பதிவாகியுள்ளன“ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் ஐஸ்லாந்துதான் எரிமலைகள் செயல்பாட்டில் உள்ள பகுதியாக உள்ளது. மேலும் ஐஸ்லாந்து வடக்கு அட்லாண்டிக் தீவு, மத்திய அட்லாண்டிக் ரிட்ஜ் , ஐ யூரேசிய மற்றும் வட அமெரிக்க டெக்டோனிக் தகடுகளை பிரிக்கிறது.
இதன் காரணமாக ஐஸ்லாந்து நிலநடுக்கங்கள் அச்சத்தை தரவல்லவை என விஞ்ஞானிகள் அறிவித்திருக்கின்றனர்.



