தாய்லாந்து - இலங்கை விலங்கு பரிமாற்றத்தின் படி யானைக்குப் பின் பறவையினம்

#SriLanka #Birds #Lanka4 #Thailand #இலங்கை #லங்கா4 #பறவை_இனங்கள்
தாய்லாந்து - இலங்கை விலங்கு பரிமாற்றத்தின் படி யானைக்குப் பின் பறவையினம்

இலங்கை - தாய்லாந்து விலங்கு பரிமாற்றத்திட்டத்தின் படி, தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு மூன்று cassowary பறவையினம் அனுப்பப்பட்டுள்ளது.

மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து 9 மாத வயதுடைய இரண்டு ஆண் காசோவரி பறவைகளும் ஒரு காசோவரி குஞ்சும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

 சுமார் 05 அடி உயரமும் சுமார் 60 கிலோகிராம் எடையும் கொண்ட இந்த cassowary பறவைகள் உலகில் அழிந்து வரும் பறவைகளில் இரண்டாவது பெரிய பறவைக் குழுவைச் சேர்ந்தவை.

 மிகவும் வண்ணமயமான இந்த பறவைகள் வானில் பறக்க முடியாது என்பது சிறப்பு. இதேவேளை இந்த விலங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ், இலங்கையில் இருந்து பல வகையான பாம்புகள் அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் இந்த காசோவாரி பறவைகளை பொறுப்பேற்க தெஹிவளை மிருகக்காட்சி சாலையிலிருந்து  கால்நடை வைத்தியர் தம்மிகா தசநாயக்க, மிருகக்காட்சிசாலையின் மிருக பராமரிப்பாளர்களான அசோக ஜயலத், அசங்க பெர்னாண்டோ ஆகியோர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!