எல் சால்வடோரின் முன்னாள் அதிபர் மொரிசியோ ஃபூன்ஸ்க்கு 06 ஆண்டுகள் சிறை!

#world_news #Lanka4
Thamilini
2 years ago
எல் சால்வடோரின்  முன்னாள் அதிபர் மொரிசியோ ஃபூன்ஸ்க்கு 06 ஆண்டுகள் சிறை!

வரி ஏய்ப்பு செய்தமைக்காக  எல் சால்வடோரின்  முன்னாள்  அதிபர் மொரிசியோ ஃபூன்ஸ்க்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  

எல் சால்வடோர் நீதிமன்றம் நேற்று (ஜுலை 05) இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. 

வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அதிபர் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத நிலையில், மேற்படி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

முன்னாள் அதிபருக்கு எதிராக  எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்குமாறு வழக்கறிஞர்கள் கேட்டிருந்தனர்.  இருப்பினும் அவருக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனையே விதிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை  மே மாதத்தின் பிற்பகுதியில், மற்றொரு தீர்ப்பாயம்  ஃபூன்ஸ்க்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்தது. எல் சால்வடோரின் சக்திவாய்ந்த  street gangs உடன் பேச்சுவார்தை நடத்தியமைக்காக அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!