மனித படுகொலை செய்யும் அரசாங்கம் - தரமற்ற மருந்து இறக்குமதி குறித்து காவிந்த ஜயவர்தன விமர்சனம்!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
மனித படுகொலை செய்யும் அரசாங்கம் - தரமற்ற மருந்து இறக்குமதி குறித்து காவிந்த ஜயவர்தன விமர்சனம்!

தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்து மனித படுகொலை செய்யும்  செயற்பாட்டில் அரசாங்கம் ஈடுபடுகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார். 

 பாராளுமன்றத்தில் நேற்று (ஜுலை 05) இடம்பெற்ற 'நீதிமன்றங்களில் நீதி விசாரணைகளில் தாமதம் மற்றும் அதற்கான காரணங்கள்' தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறினார். 

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், நாட்டில் சுகாதாரத்துறை முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது எனவும்,  மருந்து உட்பட மருத்துவ உபகரணங்களுக்கான  தட்டுப்பாடு நாளாந்தம் தீவிரமடைந்து செல்கிறது எனவும் குறிப்பிட்டார். 

இவ்வாறான பின்னணியில் தரமற்ற மருந்துகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதுடன் இதனை பாவித்த ஐவர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் சபையில் சுட்டிக்காட்டினார். 

அத்துடன்  புதிய இறக்குமதியாளருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதே இதற்கான காரணம் எனக் கூறிய காவிந்த, இதன் பின்னால் அரசாங்கத்திற்கு இணக்கமான ஒருவரின் தங்கையின் மகன் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். 

மேலும் அப்பாவி மக்களை கொலை செய்யும் செயற்பாடுகளுக்கு இணையான செயற்பாட்டில் அரசாங்கம் ஈடுபடுகிறது எனவும் அவர் கடுமையாக விமர்சித்திருந்தார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!