லொத்தர் சீட்டுகளின் விலை இன்று முதல் 20 ரூபாவினால் அதிகரிப்பு
தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபையினால் நாளாந்தம் வழங்கப்படும் லொத்தர் சீட்டுகளின் விலையை இன்று முதல் 20 ரூபாவினால் அதிகரிப்பது நியாயமற்றது என லொத்தர் விற்பனையாளர்கள் மற்றும் மக்கள் கூறுகின்றனர்.
இன்று முதல் 20 ரூபாவாக இருந்த லொத்தர் சீட்டின் விலையை 20 ரூபாவினால் அதிகரிப்பதாலும், லொத்தர் சீட்டின் விலையை 40 ரூபாவாக உயர்த்தியதாலும் இனிமேல் லொத்தர் சீட்டு வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்று மக்கள் கூறுகின்றனர்.
மேலும் கடந்த சில மாதங்களாக லொத்தர் சீட்டு விற்பனை குறைந்துள்ள நிலையில், ஒரு லொத்தர் சீட்டு ரூ.40 ஆக உயர்த்தப்பட்டதால், லொத்தர் விற்பனை குறைந்ததால் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தங்களுக்கு வழங்கப்படும் கமிஷன் தொகையும் உயர்த்தப்பட்டாலும், லொத்தர் சீட்டு விற்பனை குறைந்துள்ளதால், அதிக வருமானம் ஈட்ட முடியவில்லை என, லொத்தர் சீட்டு விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.