காதலனுடன் விடுதியில் தங்கச் சென்ற 22 வயது யுவதி மர்மமான முறையில் மரணம்

#SriLanka #Police #Investigation #Crime
Prathees
2 years ago
காதலனுடன் விடுதியில் தங்கச் சென்ற 22 வயது யுவதி மர்மமான முறையில்  மரணம்

ரக்வான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாதம்பே ஹோட்டலில் தனது காதலனுடன் விடுதியில் தங்கச் சென்ற இருபத்தி இரண்டு வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நேற்று பகிரங்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 உயிரிழந்த சிறுமியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

 சிறுமி தூக்குப்போட்டு இறந்ததாக காதலன் கூறியதாகவும், ஆனால் சந்தேகம் இருப்பதாகவும் சிறுமியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

 கஹவத்தை சட்ட வைத்திய அதிகாரி எம்.டி.எம்.எஸ்.கே. திஸாநாயக்க நேற்று (5ம் திகதி) பிற்பகல் தனது தீர்மானத்தை வழங்கினார். 

சிறுமியின் உடல் உறுப்புகள் மேலதிக பரிசோதனைக்கு அனுப்பப்படும். பிரேத பரிசோதனை கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் நடைபெற்றது.

 ரக்வான புஞ்சி பர்வத்த பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் பிரதீபா என்பவரின் மர்ம மரணம் தொடர்பில் ரக்வான பதில் நீதவான் சரத் விஜயகுணவர்தனவின் உத்தரவின் பிரகாரம் இந்த பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

 உயிரிழந்த சிறுமி, கடந்த 04ஆம் திகதி மதியம் மாதம்பே பனாவல வீதியில் அமைந்துள்ள விடுதிக்கு தனது காதலனுடன் வந்து அங்கு அறையொன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தமை பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 ரக்வான பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி ஒருவரே காதலன் என பொலிஸார் தெரிவித்தனர்.

 அன்று இரவு ஹோட்டலை விட்டு வெளியே சென்றதாகவும், தனது காதலியிடம் பசியாக இருப்பதாக கூறியதாகவும் உணவு கொண்டு வருவதற்கு காதலியின் வங்கி அட்டையை வாங்கிச் சென்றதாகவும் காதலன் பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

 ஹோட்டல் அறைக்கு வந்தபோது கதவு மூடப்பட்டிருந்ததாகவும்இ தனது காதலி கதவைத் திறக்காததால் அப்போது ஹோட்டலுக்குப் பொறுப்பாக இருந்த பெண்ணிடம் தெரிவித்ததாகவும் காதலன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

 அறையின் பின்பகுதியில் இருந்து சென்று ஜன்னலை உடைத்து அறைக்குள் நுழையுமாறு பெண் விடுத்த அறிவிப்பின்படி, அறைக்குள் நுழைந்த போது, ​​தான் அணிந்திருந்த சல்வாரியால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு கிடந்ததாகவும் காதலன் பொலிஸாரிடனம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

 தனது காதலி அறையில் மயங்கி விழுந்ததாக அப்போது விடுதிக்கு பொறுப்பாக இருந்த மேலாளரிடம் காதலன் கூறியுள்ளதாக மேலாளர் பொலிஸில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

 யுவதி யை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் போது இளைஞனின் முச்சக்கரவண்டி நடுவழியில் நின்றதையடுத்து, மற்றுமொரு முச்சக்கர வண்டியில் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதாகவும், காதலனும் பொய் கூறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 யுவதியை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதாகவும்இ அவர் சுயநினைவின்றி இருப்பதாகவும் அந்த இளைஞன் வைத்தியசாலையில் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

 மேலும் காதலர் ஒவ்வொருவரிடமும் முன்னுக்குப்பின் முரணான வாக்குமூலங்களை அளித்துள்ளதாகவும் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ரக்வான பொலிஸார் தெரிவித்தனர்.

 உயிரிழந்த யுவதி செவிலியர் படிப்பை முடித்து தனியார் வைத்தியசாலையில் பணிபுரிந்து ஒரு மாதத்திற்கு முன்னர் வெளியேறியதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

 வெளிப்படையான தீர்ப்பு வழங்கப்பட்டதால் உயிரிழந்த பெண்ணின் காதலன் கைது செய்யப்படவில்லை எனவும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 ரக்வான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அநுர சோமசிறியின் பணிப்புரையின் பிரகாரம் குற்றப்புலனாய்வு பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி விக்கிரமபால விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!