இலங்கைக்கு வழங்கிய மேலும் இரு யானைகள் மீது கவனம் செலுத்தும் தாய்லாந்து!

#SriLanka
Thamilini
2 years ago
இலங்கைக்கு வழங்கிய மேலும் இரு யானைகள் மீது கவனம் செலுத்தும் தாய்லாந்து!

 இலங்கைக்கு வழங்கிய மேலும் இரண்டு யானைகள் குறித்தும் தாய்லாந்து அரசு கவனம் செலுத்தியுள்ளது. 

இதன்படி அந்நாடு மேலதிகமாக வழங்கிய இரு யானைகளின் உடல்நிலைக் குறித்து ஆராய்வதற்காக செப்டம்பர் மாதத்தில் கால்நடை மருத்துவர்கள் உள்ளிட்ட குழுவொன்று இலங்கை வரவுள்ளதாக தாய்லாந்து ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 

இவ்வாறானதொரு பின்னணியில் முத்துராஜா இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட மாட்டாது  என தாய்லாந்து சுற்றாடல் அமைச்சர் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

தாய்லாந்து அரசாங்கத்தின் நன்கொடையாக 22 வருடங்களாக நாட்டில் தங்கியிருந்த முத்துராஜா யானையை கடந்த 2ஆம் திகதி தாய்லாந்துக்கு கொண்டு செல்ல அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!