அம்பிட்டியே சுமனரதன தேரருக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல்!
#SriLanka
#Batticaloa
Mayoorikka
2 years ago
மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் தலைவர் அம்பிட்டியே சுமனரதன தேரர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் குழுவிற்கு இடையில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அங்கிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தனது மார்பில் கைத்துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தியதாக சுமனரதன தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
வாக்குவாதத்தின் போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் சுமனரதன தேரரை தள்ளுவது போன்ற காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.