மகனின் நாடு கடத்தலை நிறுத்துமாறு அவுஸ்ரேலிய பிரதமரிடம் தமிழ் தாய் வேண்டுகோள்

#SriLanka #Australia
Mayoorikka
2 years ago
மகனின் நாடு கடத்தலை நிறுத்துமாறு அவுஸ்ரேலிய பிரதமரிடம் தமிழ் தாய் வேண்டுகோள்

தனது மகன் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதைத் தடுக்க தலையிடுமாறு அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பனீஸிடம் தமிழ்த் தாய் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 ரீட்டா அருள்ரூபன் 2012 ஆம் ஆண்டு படகு மூலம் இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு வந்து தற்காலிக பாதுகாப்பு விசா பெற்றிருந்த நிலையில், ஒரு தசாப்த காலத்திற்கு பின்னர் நிரந்தர வதிவிட உரிமை பெற்றார். 

 அவர் தனது மகன் டிக்ஸ்டன் அருள்ரூபனை சட்டபூர்வமாக அவுஸ்திரேலியா அழைத்து வர முயற்சி செய்த போதிலும், குடிவரவுத் துறை அவரது விண்ணப்பத்தை 2016 ஆம் ஆண்டு மறுத்திருந்தது. 

 மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் விமானம் மூலம் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோர முடிந்தது, ஆனால் அன்றிலிருந்து மெல்போர்னில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

 இந்நிலையில், டிக்ஸ்டன் அருள்ரூபனை நாடு கடத்தவுள்ளதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அதற்கான நடவடிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

 தமிழ் சிறுபான்மைக் குழுவின் உறுப்பினராக இருப்பதால், அவர் இலங்கையில் சித்திரவதை செய்யப்படலாம் அல்லது கொல்லப்படலாம் என்று அவரது தாயார் அச்சம் வெளியிட்டுள்ளார்.

 "தயவு செய்து என்னுடன் என் மகனை மீண்டும் இணைக்க வேண்டும் எனவும், அவர் மட்டுமே என்னிடம் எஞ்சியிருக்கும் ஒரே குடும்ப உறுப்பினர்" என்றும் ரீட்டா அருள்ரூபன் மொழிபெயர்ப்பாளர் மூலம் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

 "பிரதமர் ஒரு தாயால் வளர்க்கப்பட்டவர் - ஒரு தாய்க்கும் மகனுக்கும் இடையிலான பிணைப்பை அவர் புரிந்துகொள்வார் என்று நம்புகிறேன்." "தயவுசெய்து எனக்கும் மற்ற அகதிகளுக்கும் உதவுங்கள்," என்று அவர் கோரியுள்ளார். 

"அனைத்து மக்களுக்கும் (அகதிகள்) நிரந்தர குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்."

 2009 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போரின் போது ரீட்டாவின் பகணவர் படுகொலை செய்யப்பட்டார். ரீட்டா 2012 இல் இராணுவ முகாமில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அவரது 26 வயது மகனின் அவுஸ்திரேலிய பாதுகாப்பு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதுடன் மேல்முறையீடு செய்வதற்கான அனைத்து வழிகளும் மூடப்பட்டுள்ளன. 

 ரீட்டா அருள்ரூபன், பிரதமருக்கு விடுத்துள்ள வேண்டுகோள் அவரது கடைசி உண்மையான நம்பிக்கையாகும். "நான் பல அதிர்ச்சிகளுக்கு ஆளானேன், பாலியல் வன்கொடுமைக்கு ஆளானேன், நான் தப்பித்து அவுஸ்திரேலியா வந்தேன்," என்று அவர் கூறினார். 

 "நான் என் மகனுடன் மீண்டும் இணைவதாக நம்பினேன், எனினும், அவரையுமு் என்னிடமிருந்து பறிக்க முயற்சிக்கிறார்கள்." என்று ரீட்டா அருள்ரூபன் தெரிவித்துள்ளார். 

 எவ்வாறாயினும், தனிப்பட்ட வழக்குகள் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று திணைக்களம் தெரிவித்துள்ளது. "இனி செல்லுபடியாகும் விசா வைத்திருக்காத நபர்கள் அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக" AAP செய்தி வெளியிட்டுள்ளது. 

 இதனிடையே, அருள்ரூபனுக்காகச் செயல்படும் சட்டத்தரணி நினா மெர்லினோ, திணைக்களத்தின் நாடு கடத்தும் அறிவிப்பிற்கு எதிராகத் தடையாணை தாக்கல் செய்வதை உறுதிப்படுத்தினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!