சென்னை உட்பட 25 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு

#India #Tamil Nadu #Tamil People #Rain #District #HeavyRain #Tamilnews
Mani
2 years ago
சென்னை உட்பட 25 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு

மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய வட ஆந்திர கடலோரப் பகுதிகளில் வளி ஆந்திர கடலோரப் பகுதிகளில் மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், மேற்கு திசை காற்றின் வேகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக இன்று முதல் ஜூலை 8-ம் தேதி வரை தமிழகத்தின் புதுச்சேரியில் பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை உள்பட 25 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த மாவட்டங்கள் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி, சேலம், திருச்சி, மற்றும் தஞ்சாவூர் லேசான/ மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4