நெடுஞ்சாலையில் நான்கு வாகனங்கள் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் 10 பேர் பலி

#India #Tamil Nadu #Accident #Tamil People #Tamilnews
Mani
2 years ago
நெடுஞ்சாலையில் நான்கு வாகனங்கள் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் 10 பேர் பலி

இன்று மகாராஷ்டிர மாநிலம் துலே மாவட்டத்தில் கண்டெய்னர் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற வாகனங்கள் மீது மோதியது. இன்று காலை 10:45 மணியளவில் மும்பை-ஆக்ரா நெடுஞ்சாலையில் உள்ள பலாஸ்னர் கிராமத்திற்கு அருகில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கண்டெய்னர் லாரி பிரேக் பிடிக்காததால் வேகமாகச் சென்று இரண்டு மோட்டார் சைக்கிள்கள், ஒரு கார் மற்றும் மற்றொரு கண்டெய்னர் மீது வேகமாக மோதியது. இதையடுத்து பேருந்து நிலையம் அருகே உள்ள ஓட்டல் மீது மோதி கவிழ்ந்தது. தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த கோர விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

துலே மாவட்டத்தில் இருந்து மத்திய பிரதேசம் நோக்கி கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4