யுனெஸ்கோவில் மோதலையும், பிளவையும் உருவாக்க முயற்சிக்க வேண்டாம் - சீனா!

#China #world_news #Lanka4
Dhushanthini K
2 years ago
யுனெஸ்கோவில் மோதலையும், பிளவையும் உருவாக்க முயற்சிக்க வேண்டாம் - சீனா!

யுனெஸ்கோவில் மோதலையும், பிளவையும் உருவாக்க முயற்சிக்க வேண்டாம் என சீனா தெரிவித்துள்ளது. 

அமெரிக்கா யுனெஸ்கோவில் மீண்டும் இணைவதற்கு முயற்சித்து வருகின்ற நிலையில், சீனா மேற்படி வலியுறுத்தியுள்ளது. 

முன்னாள் ஜனாதிபதி  டிரம்பின் ஆட்சியின்போது அமெரிக்கா யுனெஸ்கோ அமைப்பில் இருந்து விலகியது. இந்நிலையில், சீனா அந்த அமைப்பிற்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. ஆகவே அந்த அமைப்பில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்றது. 

இந்த சூழ்நிலையில், அமெரிக்கா மீண்டும் அந்த அமைப்பில் சேர முயற்சித்துள்ளது. இதற்கு ஆதரவாக 132 நாடுகள் வாக்களித்துள்ள நிலையில், எதிராக 10 நாடுகள் வாக்களித்தன. 

இதனையடுத்து அமெரிக்கா அதன் கடமைகளை நிறைவேற்ற வேண்டுமெனச் சீனா வலியுறுத்தியது. அமெரிக்கா அதன் உறுப்பியத் தொகையை முழுமையாக நேரத்துக்குள் கட்ட வேண்டும். கடந்த ஆண்டுகளில் அமைப்பிற்குக் கொடுக்கவேண்டிய பாக்கித் தொகையையும் கட்ட வேண்டும் என்று சீனா கூறியுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!