உடல் பருமனைக் குறைக்க உதவும் மாத்திரை கண்டுப்பிடிப்பு!

உடல் பருமனைக் குறைக்க உதவும்வெகோவி (Wegovy) என்ற மாத்திரையை டென்மார்க்கை சேர்ந்த நோவோ நோர்டிஸ்க் என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜி.எல்.பி.-1 அகனிஸ்ட் எனப்படும் புதிய மருந்து வகையில் ஸெமாக்ளூடைட் எனும் மூலப்பொருள் கொண்டு குறித்த மாத்திரை தயாரிக்கப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த மருந்து சோதனை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், ஊசியில் மருந்து ஏற்றினால் கிடைக்கும் பெறுபேறுகள் இந்த மருந்தை வாய்மூலம் எடுத்துக்கொள்வதன் மூலமும் கிடைக்கிறது எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த மருந்துக்கு ஒப்புதல் அளிக்குமாறு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் விண்ணப்பிக்க மருந்து தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது.
நீரிழிவு நோயினால் அவதிப்படும் நோயாளிகளுக்கு இந்த மருந்து உதவியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், வெகோவி (Wegovy) மாத்திரைகளின் விலைகள் எவ்வாறு நிர்ணயிக்கப்படும் என்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.



