வாக்னர் படையினரின் தலைவரை கொல்வதற்கு இரகசிய சதி திட்டம்!
#world_news
#Russia
Dhushanthini K
2 years ago

வாக்னர் கூலிப்படையின் தலைவரை கொல்வதற்கு இரகசிய சதி திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
இது குறித்த தகவல்களை உக்ரைனின் புலனாய்வு பிரிவின் தலைவர் வெளியிட்டுள்ளார்.
வாக்னர் குழுவினர் புட்டின் அரசாங்கத்திற்கு எதிராக திரும்பியதை தொடர்ந்தே அவரை கொலை செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஸ்யாவின் புலனாய்வு பிரிவான எவ்எஸ்பியிடம் வாக்னர் கூலிப்படையின் தலைவரை கொல்வதற்கான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக உக்ரைன் புலனாய்வு பிரிவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
பேட்டியொன்றில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் ரஸ்ய புலனாய்வு பிரிவினர் ஏற்கனவே இதற்கான திட்டங்களை வகுக்கதொடங்கியுள்ளனர் எனவும் ஆனால் அவர்கள் அதில் வெற்றிபெறுவார்களா என்பதை காலமே தெரிவிக்கும் எனவும் கூறியுள்ளார்.



