சீனாவில் ஒருபகுதியில் வெப்பம், மறு பகுதியில் மழை : ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்!

சீனாவின் தலைநகரில் கடும் வெப்பம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக ஏராளமானோர் இடம்பெயர்ந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெய்ஜிங்கில் வெப்பநிலை 35 C (95 F) ஐ தாண்டியதாக தேசிய காலநிலை மையம் தெரிவித்துள்ளது. மழையின் பற்றாக்குறை வெப்பத்திற்கு பங்களிக்கக்கூடும் என வானிலை அவதானிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே இந்த வாரம் பெய்ஜிங் மற்றும் சீனாவின் பிற பகுதிகளில் 39.6 செல்சியஸ் (103 பாரன்ஹீட்) வரை வெப்பநிலை உயரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவையொருப்புறம் இருக்க சீனாவின் ஹுனான் மாகாணத்தில் கடும் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், 10 ஆயிரம் மக்கள் குறித்த பகுதியில் இருந்து வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.
சுமார் 70 வீடுகள் இடிந்து விழுந்துள்ளதுடன், 2,283 வீடுகள் சேதமடைந்தன. விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் 575 மில்லியன் யுவான் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



