போயா தினமான இன்று தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அருகாமையில் போராட்டம்!
#SriLanka
#Jaffna
#Protest
Mayoorikka
2 years ago
சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள தையிட்டி விகாரையை அகற்றக் கோரி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் கிராம மக்களுடன் இணைந்து நடாத்தும் போராட்டத்தின் நான்காம் கட்டத்தின் இரண்டாம் நாளாகிய போயா தினமான இன்றும் தொடர்ந்தது.
இன்று காலை 10.30 மணியளவில் தையிட்டி விகாரைக்கு அருகில் ஆரம்பமாகிய எதிர்ப்பு போராட்டம் எதிர்ப்பு ஊர்வலமாக சென்று மறு பக்க வீதிப் பக்கமாக போராட்டம் தொடர்ந்தது.
இந்நிலையில் பொலிசார் வீதியில் ஊர்வலமாக போராட்டத்தை முன்னெடுக்கு முடியாது என முன்னணியினருடன் முரண்பட்டனர்.
அதற்கு முன்னணியினர் நாங்கள் பொதுப் போக்குவரத்துக்கு எவ்வித இடையூறையும் ஏற்படுத்தவில்லை என கூறினர்.
வழமையாக போராட்டத்தை முன்னெடுக்கும் வீதிக்கு மறு பக்கம் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.



