பயணங்களை மேற்கொள்ள முடியாமல் சிட்னி விமான நிலையத்தில் காத்திருக்கும் மக்கள்!

#world_news #Lanka4
Dhushanthini K
2 years ago
பயணங்களை மேற்கொள்ள முடியாமல் சிட்னி விமான நிலையத்தில் காத்திருக்கும் மக்கள்!

சிட்னி விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் பல உள்நாட்டு விமானங்கள் தாமதமாகியுள்ள நிலையில், பயணிகள் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விமான சேவைகள் தொடர்ந்து நான்காவது நாளாக தாமதமாகியுள்ளன. இதுகுறித்து விமான நிறுவனம் எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை என பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். 

இந்நிலையில், பயணிகள் விமான நிலையத்திற்கு வரும் வரை இந்த தகவல் தெரியாமல் பல அசௌகரியங்களை எதிர்கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

மோசமான வானிலை உள்ளிட்ட பல காரணங்களால் விமானங்கள் தாமதமாகியுள்ளன. சில விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!