அமெரிக்காவிற்கு எதிரான போருக்கு தயாராகி வரும் சீனா!

அமெரிக்காவிற்கு எதிரான போருக்கு சீனா தயாராகி வருகிறது என 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி வேட்பாளர் நிக்கி ஹேலி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சீனாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையில் மோதல் போக்கு நீடித்து வருகின்ற நிலையில், அவர் மேற்படி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க ராணுவத்தின் கலாச்சாரத்தை அதிகரித்ததற்காக அதிகாரிகளை குறை கூறிய ஹேலி பல முக்கியமான துறைகளில் அமெரிக்காவை விட சீனா முன்னேறி வருவதாகவும் கூறினார்.
சீனாவின் வியக்க வைக்கும் கடற்படைத் திறன்கள் மற்றும் இராணுவ தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் ஆகியவற்றை மேற்கோள் காட்டிய அவர், அமெரிக்காவிற்கு கடுமையான அச்சுறுத்தல் பிரச்சினை இருப்பதாக விமர்சித்துள்ளார்.
அவர்களிடம் 340 கப்பல்கள் உள்ளன, எங்களிடம் 293 கப்பல்களே உள்ளன. இன்னும் இரண்டு ஆண்டுகளில் 400 கப்பல்கள் இருக்கும், ஆனால் எங்களிடம் இன்னும் இரண்டு தசாப்தங்களில் 350 கப்பல்கள் கூட இருக்காது.
அவர்கள் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை உருவாக்கத் தொடங்கியுள்ளார்கள். நாங்கள் இப்போதுதான் தொடங்குகிறோம் என சீனாவின் இராணுவ கட்டமைப்பையும், அமெரிக்காவின் இராணுவ கட்டமைப்பையும் ஒப்பிட்டு பேசியுள்ளார்.
பாதுகாப்பு விஷயத்தில் பல முக்கியமான விஷயங்களில் அமெரிக்காவை விட சீனா முன்னேறி வருவதாக கூறிய அவர், நாங்கள் எங்கள் இராணுவத்தை வலுப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.



