நாட்டு மக்கள் பாரிய அளவில் ஏமாற்றப்பட்டுள்ளனர் - பாட்டாலி சம்பிக ரணவக்க
அரசியல்வாதிகள் மட்டுமன்றி, கடத்தல்காரர்கள், வர்த்தகர்கள், அதிகாரிகள் ஆகியோரும் நாட்டு மக்களுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டாலி சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், "குற்றவியல் தீர்ப்பு ஆணைக்குழுவை நியமித்து இந்த நாட்டில் பொருளாதார முடிவுகளை எடுத்தவர்கள் குறிப்பாக மத்திய வங்கியின் நாணய சபை மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர்கள், நிதி அமைச்சர்கள் பொறுப்புக் கூற வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம்.
பொருளாதார குற்றங்கள் தொடர்பான விசேட ஆணைக்குழுவொன்று இந்நாட்டு மக்களுக்கு நீதி வழங்க வேண்டும். ஐக்கிய தேசிய முன்னணி அந்தப் பொறுப்பை நிறைவேற்றும் என்பதை நாம் மிகத் தெளிவாகக் கூற வேண்டும்.
இப்போது மத்திய வங்கி வருங்கால வைப்பு நிதி ஊழியர்களின் நம்பிக்கையை உடைத்து அந்த பலனை அழித்துவிட்டது.
மூன்று ஆண்டுகளுக்குள், ஐஸ்லாந்து திவால் நிலையில் இருந்து வெளிவந்து சக்திவாய்ந்த நாடாக உருவெடுத்துள்ளது. அந்த வகையில் பொருளாதார குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்'' என்றார்.