கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் பொதுமக்களுக்கு அம்பலப்படுத்தப்படும்: நிதி அமைச்சு

#SriLanka #Finance
Mayoorikka
2 years ago
கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம்  பொதுமக்களுக்கு அம்பலப்படுத்தப்படும்: நிதி அமைச்சு

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பான வேலைத்திட்டம் பகிரங்கப்படுத்தப்படும் என நிதி அமைச்சு அறிவித்த்துள்ளது.

 எதிர்வரும் இரண்டு நாட்களில் குறித்த வேலைத்திட்டம் மக்களுக்கு தெரியப்படுத்தப்படும் என  நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன தெரிவித்தார்.

 மேலும், ஊழியர் சேமலாப நிதியம் உள்ளிட்ட தரப்பினருக்கு இந்த திட்டம் முன்வைக்கப்படவுள்ளது..

 உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பான பிரேரணை மீதான பாராளுமன்ற விவாதம் நேற்று முன்தினம் (01) பகல் முழுவதும் இடம்பெற்றதுடன் அது தொடர்பான வாக்கெடுப்பில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

 பிரேரணைக்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்படி, இறையாண்மைக் கடனை நிலைநிறுத்துவதற்கான உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பை நடைமுறைப்படுத்துவதற்கான பிரேரணை பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக பாராளுமன்றத்தின் பொதுச் செயலாளர் நேற்று நிதி அமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!