சுகாதாரத் துறையை சீர்குலைக்க முயற்சி - கெஹலிய ரம்புக்வெல
சுகாதாரத்துறையை சீரழிக்கும் வகையில் செப்டெம்பர் மாதத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட குழுவொன்று திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என சுகாதாத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
ஸ்திரமான நாட்டிற்காக அனைவரும் ஒன்றிணைவோம் என்ற தொனிப்பொருளில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது ஊடகவியலாளர்கள் மருத்துவ விநியோகத் துறையை மீட்க எவ்வளவு காலம் எடுக்கும்? எனக் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அமைச்சர், இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களை சீர்குலைக்கும் முயற்சியில் செப்டம்பர் மாதம் வேலைநிறுத்தங்கள் தொடங்கப்படும் என்று தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் கூறினார்.
அதேநேரம் 2021 ஆம் ஆண்டு மருத்துவ விநியோகத் துறையில் மில்லியன் கணக்கில் செலவழித்து ஸ்தாபிக்கப்பட்ட தகவல் அமைப்பு மீண்டும் 100 மில்லியன் ரூபா செலவில் ஏற்படுத்தப்பட்டது ஏன்? இது என்ன திட்டம்?அதற்கான காரணம் என்ன? எனவும் கேள்வி எழுப்பினர்.
இந்த கேள்விக்கு பதிலளித்த ரம்புக்வெல, இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், விசாரணைகள் சிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும்,கூறினார்.