இலங்கை புதிய கைத்தொழில் உத்திகளைக் கடைப்பிடிக்க வேண்டும் - நந்தலால் வீரசிங்க!

#Lanka4
Thamilini
2 years ago
இலங்கை புதிய கைத்தொழில் உத்திகளைக் கடைப்பிடிக்க வேண்டும் - நந்தலால் வீரசிங்க!

இலங்கை புதிய கைத்தொழில் உத்திகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். 

நாட்டின் கைத்தொழில்களை வளர்ச்சிப் பாதையை நோக்கி செலுத்துவதற்கு இலங்கை புதிய தொழில் உத்திகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தான் கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

இலங்கையின் கைத்தொழில் துறையானது ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்  என வலியுறுத்திய அவர், உலகளாவிய சந்தைகளை அணுகுவதற்கு நாட்டின் தொழில்முயற்சியாளர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். 

மேலும், சர்வதேச சந்தைகளின் இயக்கவியலுக்கு ஏற்ப தேசிய கைத்தொழில் அபிவிருத்தி மூலோபாயத்தை மீள்பரிசீலனை செய்வது மிகவும் அவசியமானது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!