இழப்பீட்டுக்காக சிங்கப்பூர் செல்லும் இலங்கை தூதுக்குழு!
#SriLanka
Mayoorikka
2 years ago
இழப்பீடு பெறும் முயற்சியில் எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலின் காப்புறுதி நிறுவனத்துடனான சந்திப்பிற்காக, சட்டமா அதிபர் சஞ்சய ராஜரத்தினம் தலைமையிலான இலங்கை தூதுக்குழு இந்த மாத இறுதியில் சிங்கப்பூர் செல்லவுள்ளது.
பேரழிவுக்கான அதிகபட்ச இழப்பீடு பெறும் முயற்சியில் பிரதிநிதிகள் குழு ஜூலை 18 மற்றும் 19ஆம் திகதிகளில் காப்புறுதி நிறுவன பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளது.
இந்த கலந்துரையாடலில் கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.
கலந்துரையாடலுக்காக இலங்கைக்கு வருவதற்கு குறித்த காப்புறுதி நிறுவனம் மறுத்ததை அடுத்து இலங்கை குழுவின் இந்த பயணத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது