உணவகத்திலிருந்து கட்டணம் செலுத்தாமல் வெளியேற முயன்ற பாடகரால் குழப்பம்
பழம்பெரும் பாடகர் சமன் டி சில்வா உணவகத்திலிருந்து கட்டணம் செலுத்தாமல் வெளியேற முற்பட்ட போது சண்டையிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் பாணந்துறை பிரதேசத்தில் பதிவாகியுள்ளதுடன், உணவக ஊழியர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
பாடகர் திரு.சமன் டி சில்வா மற்றும் சிலர் நேற்று (01) இரவு பாணந்துறை பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றிற்கு வந்து உணவு அருந்தியுள்ளனர்.
அந்த உணவுக்கான அவர்களின் பில் 1,650 ரூபாய். சமன் டி சில்வாவிற்கும் உணவகத்தின் ஊழியர்கள் குழுவிற்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதன்பின், அவரும், மற்றவர்களும் பில் தொகையை செலுத்தாமல் செல்ல முயன்றதாக தகவல் வெளியானது.
கட்டணத்தை செலுத்த மறுத்த சமன் டி சில்வா உணர்ச்சிவசப்பட்டு நடந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தில் உணவகத்தின் ஊழியர்கள் இருவர் காயமடைந்ததுடன், அங்கிருந்த பொருட்களும் சேதமடைந்தன.
இச்சம்பவத்தை எதிர்கொண்ட உணவகத்தின் காசாளர் மற்றும் பணியாளரும் இது தொடர்பில் பாணந்துறை தெற்கு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.