சட்டவிரோதமாக ஐரோப்பா செல்ல முயன்றவர் லார்னாகா விமான நிலையத்தில் கைது!

#world_news #Lanka4
Thamilini
2 years ago
சட்டவிரோதமாக ஐரோப்பா செல்ல முயன்றவர் லார்னாகா விமான நிலையத்தில் கைது!

சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேற  முயன்ற இருவர் லார்னாகா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 

 குறித்த இருவரும், ஆள்மாறாட்டம் செய்து பிறிதொருவரின் கடவுச்சீட்டை பயன்படுத்தி வெளியேற முற்பட்டதாக அதிகாரிகள் கூறினர். 

குறித்த சம்பவம் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இந்த சம்பவம் வலுவான கடவுச்சீட்டு கட்டுப்பாடுகளையும், முக்கியத்துவத்தையும் காட்டுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

குறித்த இருவரும் போலி கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி ஐரோப்பா  செல்ல முற்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது. 

சைப்ரஸில் சட்டப்பூர்வமாக வசிக்கும் மூன்றாம் நாட்டுப் பிரஜையான 24 வயதான நபர் ஐரோப்பிய கடவுச்சீட்டை வைத்திருந்ததில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை சோதனை செய்தபோதேஇந்த விடயம் அம்பலமாகியது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!