பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு ஏற்பட்ட அவலநிலை!

#SriLanka #University
Mayoorikka
2 years ago
பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு ஏற்பட்ட அவலநிலை!

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் 80வது ஆண்டு நிறைவையொட்டிபல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழலை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டது.

 இந்நிலையில் ஒரே நாளில் பேராதனை பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழலை பொதுமக்கள் குப்பை கூடமாக மாற்றிய சம்பவம் பல்கலைக்கழக சமூகத்தினரை பெரும் அதிருப்திக்குள்ளாகியுள்ளது.

 பேராதனை பல்கலைக்கழகத்தை பார்வையிட சென்றிருக்கும் பொதுமக்கள் பொறுப்பற்ற விதத்தில் நடந்துகொண்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டபட்டுள்ளது.

 உணவுகளை சாப்பிட்டு விட்டு குப்பைகளை பொது இடத்தில் வீசுவது அரச வளங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவது போன்ற பல விடயங்கள் வேதனையை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பல்கலைக்கழக வளாகம் மற்றும் ஆய்வு நடைமுறைகள், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பகுதிகளை பொதுமக்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

 இதேவேளை பொது மக்களின் பார்வைக்காக பேராசிரியர் எதிரிவீர சரத்சந்திர அருங்காட்சியகம், ஜோர்ஜ் கீட்டின் ஓவியங்களின் தொகுப்பு மற்றும் பல்கலைக்கழகத்தின் 5,000 அரிய புத்தகங்களின் தொகுப்பும் காட்சிக்கு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

images/content-image/2023/07/1688274320.jpg

images/content-image/2023/07/1688274303.jpg

images/content-image/2023/07/1688274289.jpg

images/content-image/2023/07/1688274272.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!