பச்சைக்குத்திக் கொண்ட நபர்களுக்கு வைத்தியர் விடுத்துள்ள அறிவுறுத்தல்!
#SriLanka
#doctor
#Lanka4
Thamilini
2 years ago
உடம்பில் பச்சைக்குத்திக்கொண்ட நபர்களிடம் இருந்து ஒருவருட காலப்பகுதிற்குள் குருதி பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது என குருதி மாற்று மத்திய நிலையத்தின் பணிப்பாளர் வைத்தியர் லக்ஷ்மன் எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.
எய்ட்ஸ் உள்ளிட்ட நோய் தாக்கங்களை கவனத்தில் கொண்டு மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
எவ்வாறிருப்பினும் அதற்கு பின்னரான காலப்பகுதியில் குருதியை பெற்றுக்கொள்வதில், எந்த பிரச்சினையும் காணப்படாது எனத் தெரிவித்துள்ள அவர், தற்போது தேவையான குருதி கையிருப்பில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.