இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக தவான்
#India Cricket
#Cricket
#Tamilnews
Mani
2 years ago

ஆசிய விளையாட்டுப் போட்டியானது, நான்கு ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் விளையாட்டு நிகழ்வு ஆகும். இதில் ஆசிய கண்டத்தில் உள்ள பல நாடுகள் இந்த விளையாட்டு தொடரில் பங்கேற்கும்.
இதில் தடகளம், ஹாக்கி, மல்யுத்தம் போன்ற பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கடைசியாக 2014ம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகள் இடம்பெற்றிருந்தது.
இந்த வருடம் நடைபெறவுள்ள தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் செயல்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது..
ஒருநாள் உலகக்கோப்பை போட்டி தொடர் நடக்கும் தேதிகளை ஒட்டியே ஆசிய விளையாட்டுப் போட்டி தொடரும் நடைபெறுகிறது. இதனால் பிசிசிஐ, இந்திய B டீமை ஆசிய விளையாட்டு தொடரில் பங்கேற்க அனுப்பும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.



