புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க ஐநாவிற்கு தெரிவு செய்யப்பட்ட இலங்கை தூதர்!
#Lanka4
Thamilini
2 years ago
அனைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக இலங்கையின் தூதர் பிரசாத் காரியவசம் ஐ.நா குழுவிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற தேர்தலில் ஏழு பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.
இதில், மொராக்கோ, அல்ஜீரியா, மொரிட்டானியா, துருக்கியே, மெக்சிகோ மற்றும் புர்கினா பாசோ ஆகிய ஆறு வேட்பாளர்களுடன் தூதர் காரியவசம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளர், தூதுவர் காரியவசம் ஓய்வுபெற்ற தொழில் இராஜதந்திரி என்பதுடன், இதற்கு முன்னர் மூன்று தடவைகள் ஐ.நா குழுவில் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.