ஓடிடி தளத்தில் வெளியாகும் 'ஃபர்ஹானா' திரைப்படம் குறித்த தேதி அறிவிப்பு
#Cinema
#Actress
#TamilCinema
#2023
#Movie
Mani
1 year ago

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் இயக்குனர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'ஃபர்ஹானா' படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். மே 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பலரின் பாராட்டுகளைப் பெற்றது.
இந்நிலையில் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதையடுத்து, 'ஃபர்ஹானா' திரைப்படம் ஜூலை 7-ம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை ஓடிடி தளம் வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.



