கலிபோர்னியா தீ விபத்தில் வீடுகள் மற்றும் வாகனங்கள் எரிந்து நாசம்
#Accident
#America
#people
#world_news
#fire
#Tamilnews
#Breakingnews
#World
Mani
2 years ago

கலிபோர்னியாவின் பெரிஸில் உள்ள குறிப்பிட்ட பகுதியில் இன்று பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் தீப்பற்றி எரிந்து வருகிறது. தீ வேகமாக பரவி வருகிறது.
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். விமானம் மூலமும் தீயை கட்டுக்குள் கொண்டு வருகின்றனர்.
ஏராளமான வீடுகள், கட்டிடங்கள், வாகனங்கள் தீயில் எரிந்து நாசமானது. இதுவரை, நான்கு வீடுகள் எரிந்து நாசமானதாகவும், ஏராளமான வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததாகவும் செய்திகள் வந்துள்ளன. அங்கு, மக்கள் கட்டாயம் வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



