களனி ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளன!
#Lanka4
Thamilini
2 years ago
களனி ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து கொஸ்கம நோக்கிப் பயணித்த ரயில் பேஸ்லைன் வீதி மற்றும் கோட்டை வீதி ரயில் நிலையங்களுக்கு இடையில் நேற்று (27.06) மாலை 4 மணியளவில் தடம் புரண்டது.
இதனையடுத்து குறித்த பகுதியூடான ரயில்போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.