அழியக்கூடிய மை கொண்ட பேனாவை பயன்படுத்தினாரா ரிஷி சுனக்?

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் புதிய சர்ச்சையொன்றில் சிக்கியுள்ளார்.
அதாவது அவர் அழித்தல் அம்சம் கொண்ட பேனாவை முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடப் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இருப்பினும் பிரதமர் அலுவலகம் இந்த விடயத்தை மறுத்துள்ளது.
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் "Pilot V" fountain என்ற பேனாவை பயன்படுத்தி அமைச்சரவை குறிப்புகளில் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அவர் பங்கேற்ற சில உச்சிமாநாடுகளின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் அவர் இந்த பேனாவை பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், ரிஷி சுனக் கையெழுத்திட்ட சில முக்கிய ஆவணங்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் எழுந்துள்ளது.
இதற்கிடையே “இது சிவில் சேவையால் வழங்கப்பட்ட மற்றும் பரவலாகப் பயன்படுத்தப்படும் பேனா எனவும் பிரதமர் அழித்தல் செயல்பாட்டை மேற்கொள்ளும் பேனாவை ஒருபோதும் பயன்படுத்தவில்லை எனவும் அவரது செய்தித் தொடர்பாளர் கூறியதாகக் செய்தி வெளியாகியுள்ளது.



