அஸ்வெசும கொடுப்பனவில் பாதிக்கப்பட்ட கேப்பாபுலவு மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்
#SriLanka
#Kilinochchi
#strike
#Lanka4
Kanimoli
2 years ago
அரசின் அஸ்வெசும கொடுப்பனவில் பாதிக்கப்பட்ட கேப்பாபுலவு மக்கள் மாவட்ட செயலக வாயில்களை மூடி கவனயீர்ப்பு போராட்டம் நடத்தியுள்ளனர்.
பொருளாதார ஸ்திரத்தன்மை தேவைப்படும் நபர்களுக்கு உதவுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட “அஸ்வெசும” திட்டத்திற்கு அரசியல் சாயம் பூசி, தமது அரசியல் தேவைகளை நிறைவேற்ற சில தரப்பினரின் முயற்சி மேற்கொள்வது தொடர்பிலும் கவனம் செலுத்தியுள்ளது.
எவ்வாறாயினும், தகுதியானவர்களை தெரிவு செய்வதில் குறைபாடுகள் இருப்பின், அது உடனடியாக நிவர்த்தி செய்யப்படும் எனவும், இது தொடர்பில் எதிர்வரும் வாரங்களில் மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் சகல தரப்பினருடனும் கலந்துரையாடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.