நாடாளாவிய ரீதியாக 2000 பாடசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை!
நாடாளாவிய ரீதியாக 2000 பாடசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கல்வி மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் அமுல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தின் படி, 100 மாணவர்களுக்கும் குறைவான மாணவர்களை கொண்ட பாடசாலைகளே மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் கடந்த 3 வருடங்களில் ஒரு சதவீதத்திற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட சுமார் 300 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்தின் மூலம் கொத்தணி பாடசாலை முறை, தேசிய பாடசாலை அமைப்பு, தேசிய பாடசாலைகளுடன் இணைக்கப்பட்ட பாடசாலை வலையமைப்பு உருவாக்கப்படும் என்றும் திட்டமிடல் திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும் அதற்கான அபிவிருத்தி வளங்கள் அப்பாடசாலைகளில் இல்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.