போர் விமானங்களை அழித்துவிடுவோம் : சீனாவை எச்சரிக்கும் தைவான்!

#China
Thamilini
2 years ago
போர் விமானங்களை அழித்துவிடுவோம் : சீனாவை எச்சரிக்கும் தைவான்!

தங்கள் நாட்டின் சர்வதேச எல்லைப் பகுதிக்குள் வரும் சீன விமானங்களை அழிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தைவான் தெரிவித்துள்ளது. 

சீனா, தைவானை தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக கருதுகிறது. இதனால், தைவானை இணைத்துக்கொள்ளவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. 

ஆனால் சீனாவின் இந்த கருத்துக்கு தைவான் மறுப்பு தெரிவித்து வருவதுடன், மேற்குலக நாடுகளின் ஆதரவையும் கோரியுள்ளது. 

இந்த சூழ்நிலையில், அமெரிக்கா தைவானுக்கான உதவிகளை செய்து வருகிறது. இதனால் சீனா மற்றும் அமெரிக்காவிற்கு இடையில் பதற்றம் அதிகரித்துள்ளது. 

இதற்கிடையே தைவான் கடல்  ஜலசந்தியில் சீனா தங்களது போர் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை  நிலைநிறுத்தியுள்ளதோடு, அவ்வவ்போது அத்துமீறியும் வருகின்றன. 

இந்நிலையில் தீவு நாடான தைவானுக்கு அருகில் உள்ள 12-மைல் மண்டலம் என அழைக்கப்படும் பகுதிக்குள் நுழையும் சீனாவின் போர் விமானங்கள் மற்றும் போர் கப்பல்களை தைவான் ஆயுதப்படை அழித்து ஒழிக்கும் என தைவான் பாதுகாப்பு துறையின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் லின் வென்ஹுவாங் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!