வாக்னர் கலகம் உள்நாட்டு போரை தோற்றுவித்திருக்கும் - விளாடிமிர் புட்டின்
#Russia
Thamilini
2 years ago
வாக்னர் கலகம் உள்நாட்டு போரை தோற்றுவித்திருக்கும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.
கிரெம்ளின் மாளிகையின் வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவர் இவ்வாறு கூறினார். இந்த கூட்டத்தில் தேசியக் காவலர் மற்றும் இராணுவப் பிரிவுகளைச் சேர்ந்த 2500 பேர் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது உரையாற்றிய புட்டின், கலகத்தை "மிகவும் ஆபத்தான சூழ்நிலை" என்று விவரித்தார். அத்துடன் தாக்குதலின் போது உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.
மேலும், இந்த கலகத்தை சமாளிக்க இராணுவம் மற்றும் நாட்டு மக்கள் அனைவரும், ஒருங்கிணைந்து செயற்பட்டதாகவும், ரஷ்ய சமுதாயத்தின் ஒட்டுமொத்த பங்களிப்பு மிகப் பெரிய பக்கபலமாக அமைந்தாகவும் புட்டின்தெரிவித்துள்ளார்.