‘அஸ்வெசும’ நலன்புரி உதவித் திட்டம் : ஏறக்குறைய 190,000 முறையீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அறிவிப்பு!

#SriLanka
Soruban
2 years ago
‘அஸ்வெசும’ நலன்புரி உதவித் திட்டம் : ஏறக்குறைய 190,000 முறையீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அறிவிப்பு!

‘அஸ்வெசும’ நலன்புரி உதவித் திட்டத்தின் பயனாளிகள் பட்டியல் தொடர்பில் இதுவரை ஏறக்குறைய 190,000 முறையீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். 

இதன்படி, இதுவரை 188,794 முறையீடுகளும் 3,304 ஆட்சேபனைகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன்  வார நாட்களில் 1924 என்ற தொலைப்பேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி பொதுமக்களும் தங்களது கருத்துக்களை கூற முடியும் எனவும் ஷெஹான் சேமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை ‘அஸ்வெசும’ சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மக்கள் மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை நாடளாவிய ரீதியில் உள்ள பிரதேச செயலகங்களில் தனிப்பட்ட முறையில் கையளிப்பதற்கான நடவடிக்கைகளும்  மேற்கொள்ளப்பட்டுள்ளாகவும் அவர் கூறியுள்ளார். 

மேலும், “அஸ்வெசுமா’ சமூக நலத் திட்டத்தின் இறுதிப் பயனாளிகள் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை.  மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை மதிப்பீடு செய்த பின்னர் அரசாங்க முகவர்கள் ஊடாக குறித்த பட்டியலை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!