இரண்டு தசாப்தங்களாக பூகோள அரசியலுக்குள் சிக்கித் தவிக்கும் இலங்கை: சீனாவில் நாமல் தகவல்
இந்த வருட இறுதிக்குள், இலங்கை ஜனாதிபதி, சீனாவுக்கு விஜயம் செய்வார் என தாம் நம்புவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உட்பட இலங்கை - சீன நட்புறவு சங்கத்தின் உறுப்பினர்களான 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீனா சென்றுள்ளனர்.
இந்தநிலையில் சீனாவின் அரச ஊடகமான GGTN உடன் இடம்பெற்ற நேர்காணலில், நாமல் ராஜபக்ச தமது கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இக்கட்டான காலங்களில் இலங்கைக்கு சீனா துணை நின்றது அதேபோன்று, இலங்கையும் எப்போதும் சீனாவின் கொள்கையை கடைபிடித்து வருகிறது.
இந்த வருட இறுதிக்குள், இலங்கை ஜனாதிபதி, சீனாவுக்கு விஜயம் செய்வார் என தாம் நம்புவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சீனாவின் 'கடன் பொறி இராஜதந்திரம்' குறித்து கருத்துரைத்த நாமல் ராஜபக்ச, இலங்கை கடந்த இரண்டு தசாப்தங்களாக பூகோள அரசியலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்