மட்டக்களப்பு வாகரையில் வேட்டைக்கு சென்ற சிறுவன் உயிரிழப்பு!
#SriLanka
#Batticaloa
#Death
Mayoorikka
2 years ago
மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் வேட்டைக்கு சென்ற நிலையில் கட்டுத் துப்பாக்கி வெடித்து சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றைய தினம் மாலை ஒரு குழுவுடன் குறித்த சிறுவன் காட்டுப் பகுதிக்கு வேட்டைக்கு சென்றிந்த நிலையில் அங்கு வீரப் பழம் பறித்துக் கொண்டிருந்த வேளையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பில், கட்டுத் துப்பாக்கி வெடித்ததினாலேயே குறித்த சிறுவன் உயிரிழத்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் குறித்த சிறுவனுடன் சென்றிருந்த மூவரை கைது செய்துள்ளனர்.
எனினும் வேறு ஏதும் காரணங்களினால் சிறுவன் உயிரிழந்திருக்கலாம் என பிரதேச வாசிகள் நம்புகின்றனர்.
இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

