கனரக இராணுவ வாகனங்களை ரஷ்ய படையினரிடம் ஒப்படைக்கும் வாக்னர் படையினர்!
தனியார் படையான வாக்னர் குழு தனது கனரக இராணுவ வாகனங்களை ரஷ்ய படைகளிடம் ஒப்படைக்க தயாராகி வருவதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வாக்னர் கூலி படையினர் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறி மொஸ்கோவை முற்றுகையிட்டனர்.
பின்னர் பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோவின் தரகு ஒப்பந்தத்தின் மூலம் கலகம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் கீழ், சில வாக்னர் கூலிப்படையினர் ரஷ்ய இராணுவத்தில் உள்வாங்கப்படுவார்கள், மேலும் பிரிகோஜின் பெலாரஸுக்கு இடம்பெயர ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில், இராணுவ உபகரணங்களை மாற்றுவதன் மூலம் இந்த ஒப்பந்த செயல்முறை நடந்துகொண்டிருக்கிறது என்பதை விளக்குகிறது.
இதற்கிடையே ரஷ்ய ஜனாதிபதி புட்டின் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். குறித்த அறிக்கையில், பெரும்பாலான வாக்னர் போராளிகள் "தேசபக்தர்கள்" என்றும், அண்டை நாட்டில் தங்கள் முதலாளியுடன் சேருவதற்கான விருப்பத்தை அவர்களுக்கு வழங்கினர் என்றும் கூறினார்.
ஆனால் ஆய்வாளர்கள் கூலிப்படையினருக்கு உறுதியளிக்கப்பட்ட பாதுகாப்பை வழங்க வேண்டிய அவசியமில்லை, இது புடின் அமைத்த "பொறியாக" இருக்கலாம் என்று விமர்சித்துள்ளனர்.