நியூயோர்க்கில் தீபாவளி பண்டிகையில் பாடசாலைகளுக்கு விடுமுறை!
நியூயோர்கில் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நியூ யோர்க் நகரில் சுமார் இரண்டு இலட்சம் மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றார்கள். இந்நிலையில், இந்த நாளை பள்ளி விடுமுறையாக அறிவிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி நியூயார்க் நகரத்தின் தெற்காசிய மற்றும் இந்தோ-கரீபியன் சமூகங்களின் வளர்ச்சியை அங்கீகரிக்கும் வகையில், பள்ளி விடுமுறை பட்டியலில் தீபாவளி பண்டிகையையும் உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நகர மேயர் எரிக் ஆடம்ஸ் அறிவித்துள்ளார்.
இது சம்பந்தமான சட்டமூலத்திற்கு ஆளுநர் இன்னும் கையெழுத்திடவில்லை. இந்த மாத தொடக்கத்தில் நிவ்யோர்க் மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்தில் ஆளுநர் கையெழுத்திட்டவுடன் இது நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.