லியோவில் வனத்துறை அதிகாரியாக நடிக்கும் விஜய்? ஆந்திரா பகுதிகளில் படமாக்கப்பட்டு வரும் காட்சிகள்
#India
#Cinema
#TamilCinema
#Director
#Vijay
#Tamilnews
#Movies
Mani
2 years ago

லியோ திரைப்படத்தின் இறுதிக் கட்ட படபிடிப்பு ஆந்திர மாநிலம் தலக்கோனா அருவிப் பகுதிகளில் தற்போது நடைபெற்று வருகிறது.
நடிகர் விஜய்யை காண ஏராளமான தெலுங்கு ரசிகர்கள் சூழ்ந்தனர். ரசிகர்களுக்கு நடிகர் விஜய் கை அசைத்துவிட்டு சென்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் நடிகர் விஜய் வனத்துறை அதிகாரியாக நடிப்பதாகவும், செம்மரங்களை கடத்தி வரும் கும்பலை மடக்கி பிடிப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.



