அமெரிக்க பில்லியனர் தொழிலதிபர் ஜேம்ஸ் கிரவுன் ரேஸ் கார் விபத்தில் மரணமடைந்தார்
#Death
#Accident
#America
#world_news
#Breakingnews
Mani
2 years ago
16 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கு சொந்தக்காரரான ஜேம்ஸ் கிரவுன், தனது குடும்பத்தினருக்கு சொந்தமான ஹென்ரி கிரவுன் முதலீட்டு நிறுவனத்தை நிர்வாகித்து வந்தார்.
ஜே.பி.மோர்கன் உட்பட பல முன்னனி நிறுவனங்களை நிர்வாகித்துள்ள ஜேம்ஸ் கிரவுன், கடந்த வாரம் வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அளித்த விருந்திலும் கலந்துகொண்டார்.
தமது 70வது பிறந்த நாளை கொண்டாடிய ஜேம்ஸ் கிரவுன், பொழுதுபோக்கிற்காக அதிவேக ரேஸ் கார் ஒன்றை ஓட்டியுள்ளார். அந்த கார் ரேஸ் டிராக்கின் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த கிரவுன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.