நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் அவசரக் கூட்டம் எதிர்வரும் 30ஆம் திகதி வரை ஒத்திவைப்பு
#SriLanka
#Parliament
#Ranil wickremesinghe
#Lanka4
Kanimoli
2 years ago
இன்று (27) அழைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் அவசரக் கூட்டம் எதிர்வரும் 30ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு பிரேரணையை அங்கீகரிப்பதற்காக அடுத்த மாதம் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் பாராளுமன்றம் கூடவுள்ளதுடன், அது தொடர்பில் தீர்மானிக்க குழுவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஆளும் கட்சி எம்.பி.க்கள் குழு கூட்டம் நாளை (28) நடைபெற உள்ளது. மேலும் இந்த வாரம் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கொழும்பில் தங்கியிருக்குமாறு ஆளும் கட்சி தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.