உலகில் மகாவம்சத்திற்கு கிடைத்த அங்கீகாரம்: யுனெஸ்கோ அறிவிப்பு
#SriLanka
Mayoorikka
2 years ago
இலங்கையின் முக்கிய வரலாற்று சம்பவங்களை உள்ளடக்கிய ''மகாவம்சத்தை" உலக மரபுரிமையாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.
வம்ச கதைகள், இலங்கை நாகரீகத்தின் ஒரு சிறப்பம்சமாகும்.
தூபவம்சம், போதிவம்சம், தாது வம்சம் போன்ற பல்வேறு பௌத்த புனித சின்னங்களைத் தழுவி வம்ச கதைகள் எழுதப்பட்டுள்ளதோடு அந்த பௌத்த போதனைகளுக்கு அமைவாக தமது வாழ்க்கையை வடிவமைத்துக் கொண்ட மக்களின் 3000 ஆண்டுகளுக்கு மேல் நீண்டு செல்லும் நாகரீகத்தின் வளர்ச்சியை எழுதியுள்ள படைப்பு மகாவம்சமாகும்.
உலகத்தில் வேறு எந்தவொரு நாட்டிலும் காண முடியாத அதிசிறந்த படைபான மகாவம்சம் இலங்கையின் துறவற - இல்லற பேரறிஞர்களின் சிரேஷ்ட முயற்சியின் பெறுபேறாகும்.
அதன்படி, 2023 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவால் வெளியிடப்பட்ட உலக நினைவகத்தின் சர்வதேச பதிவேட்டில் 64 புதிய எழுதப்பட்ட பாரம்பரியங்களில் மகாவம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.