லித்தியம் - அயன் பேட்டரியை கண்டுபிடித்தவர் வயது மூப்பின் காரணமாக காலமானார்.

#Death #world_news #Lanka4 #Scientists
Kanimoli
2 years ago
லித்தியம் - அயன் பேட்டரியை கண்டுபிடித்தவர் வயது மூப்பின் காரணமாக காலமானார்.

அமெரிக்கா, லித்தியம்-அயன் பேட்டரியை கண்டுபிடித்த ஜான்குட் எனஃப் (John Goodenough)வயது மூப்பின் காரணமாக காலமானார். அவருக்கு வயது 100. 2019ல் தன்னுடைய 97வது வயதில் லித்தியம்-அயன் பேட்டரி பற்றிய ஆய்வுகளுக்காக இவருக்கு நோபல் பரிசு கிடைத்தது.

 1980ல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய போது லித்தியம்-அயன் பேட்டரியை ஜான்குட் எனஃப் கண்டுபிடித்தார். 1922ல் ஜெர்மனியில் பிறந்த ஜான்குட் எனஃப் 2-ம் உலகப்போரில் அமெரிக்காவின் வானிலை ஆய்வாளராக பணியாற்றினார். 

யேல் பல்கலைகழகத்தில் கணிதத்தில் பட்டம் பெற்ற ஜான்குட், சிகாகோ பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 2011-ம் ஆண்டு ஜான்குட்-க்கு அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா அறிவியலுக்கான குடியரசுத் தலைவர் பதக்கம் வழங்கினார். ஜான்குட் எனஃப் கண்டுபிடித்த லித்தியம் பேட்டரியை டெஸ்லாவின் மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!